Header Banner Advertisement

அடிமைகளாக விற்கப்படும் அகதிகள்


Libyan Slaves

print

 

வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்றுவரும் நிலையில் அவர்களை லிபியா கொள்ளையர்கள் 400 டாலருக்கு அடிமைகளாக விற்கப்படுவதை செய்தியாளர் ஒருவர்  ஒருவர் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளார்

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவி வெறிபிடித்த போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டனர்

இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்கின்றனர். மேலும், உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் இடம்பெயர்ந்து வருகின்றனர்

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் ஐரோப்பாவிற்கு செல்லும் அகதிகள் லிபியா வழியாக செல்கின்றனர். அப்போது லிபியாவில் உள்ள கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டு அடிமைகளாக விற்கப்படுகின்றனர். அவர்கள் 400-600 டாலருக்கு விற்கப்படுவதை  செய்தியாளர் ஒருவர்  ஒருவர் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளார்