Header Banner Advertisement

அனுபவித்து பயணிக்க ஆடம்பர ரயில்கள்!


Untitled

print
விடுமுறை காலங்களில் சொகுசாகப் பயணம் செய்து சுற்றுலாவை அனுபவிக்க வேண்டும் என்பது பலரின் ஆசை. ஆனால், அதற்கான கட்டணம் பலரை அந்தப் பக்கம் திரும்ப விடாமல் செய்துவிடுகிறது. ஆனாலும் சொகுசு ரயில்களில் பயணம் செய்ய பணக்காரக் கூட்டம் ஒன்று காத்துக் கிடக்கிறது.
கோல்டன் ஈகிள் டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ்
ஷ்யாவுக்கு மிகப் பெரிய வருமானத்தைத் தரக்கூடிய ரெயில் ‘கோல்டன் ஈகிள் டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ்’தான். இந்த ரயிலை 19-ம் நூற்றாண்டில் மன்னர் இரண்டாவது ஜான் அலெக்ஸாண்டர் தொடக்கி வைத்தார். மாஸ்கோவிலிருந்து விளாடிவேஸ்டாக் வரை செல்லும் இந்த ரயிலில் எல்.சி.டி. டி.வி., பவர் ஷவர்ஸ், குளிரைக் கட்டுப்படுத்த அடித்தள ஹீட்டிங், ஏர்கண்டிஷன் என எல்லாமே மிக நவீன தொழில்நுட்பம்தான். இந்த ரயிலில் பயணம் செய்ய ஒருவருக்கு 15,795 அமெரிக்க டாலர் கட்டணமாக பெறப் படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,58,000.
கோல்டன் ஈகிள் டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸின் உட்புறம் 
கோல்டன் ஈகிள் டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ் உணவகம்
ந்தியாவில் காஸ்ட்லியான ரயில் ‘மகாராஜா எக்ஸ்பிரஸ்‘தான். இந்த ரயில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கும் இந்திய ரயில்வே துறையால் அறிமுகப்படுத்தப் பட்டது.
மகாராஜா எக்ஸ்பிரஸுக்காக  அலங்கரிக்கப்பட்ட பிளாட்பாரம்
ஒரு வாரம் இந்த ரயிலில் பயணம் செய்வதன் மூலம் இந்தியாவின் வட மேற்கு பகுதிகளை கண் குளிர பார்க்கலாம். டெல்லியில் புறப்பட்டு ஜெய்பூர் ஏரிகள், வனவிலங்கு சரணாலயங்கள், தார் பாலைவனம், ஆக்ரா வழியாக மீண்டும் டெல்லியை வந்தடையும்.
மஹாராஜாவின் படுக்கை
மகாராஜாவின் ‘பார்”
ரயிலின் உள்ளே இனிமையான இசை எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். பாரம்பரிய நடன நிகழ்சிகளும் நடைபெறும். இந்திய மற்றும் பன்னாட்டு உணவுகளும் இங்கு பரிமாறப்படும். இந்த ரயிலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.4,52,775 கட்டணமாக பெறப்படுகிறது.
புளு ரயில்
ப்பிரிக்காவை சுற்றிப் பார்க்க ‘புளு ரயில்’ சிறந்த ஒன்று. இந்த ரயில் ஏழு நட்சத்திர ஓட்டல் வசதி கொண்டது. நூலகம், பெரிய டி.வி., விலையுர்ந்த மார்பிள்களால் வடிவமைக்கப்பட்ட கழிப்பறைகள் உள்ளன. கேப் டவுனில் இருந்து ஆயிரம் மைல் தொலைவில் உள்ள பிரிட்டோரியா மாகாணத்தை அடைய 27 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
புளு ரயில் உணவகம்
இந்த ரயிலில் பயணம் செய்தால் வைரச்சுரங்கமான கிம்பர்லியில் தங்கியிருக்கும் உணர்வு ஏற்படுமாம். சீஸன் நேரத்தில் 2,420 டாலர் கட்டணமும் சீஸன் இல்லாத காலங்களில் 1,202 டாலரும் கட்டணமாக பெறப் படுகிறது. திருமணமான புதுமணத் தம்பதியினர் ஹனிமூனுக்கு இந்த ரயில் ஏற்றது.
புளு ரயில் கழிப்பறை
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.