அரசியல்வாதியான பிரதமர்  மோடிக்கும் அரசு உயரதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் பாடம் புகட்டிய பள்ளி மாணவன்


002

print

அரசியல்வாதியான பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு பள்ளி பேருந்தை எதிர்த்து, பயன்படுத்துவதை மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பள்ளி மாணவன் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி எழுதியுள்ள சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது

பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலம், கந்த்வாவில், சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் பிறந்த ஊரான பாப்ரா கிராமத்தில் பேரணி ஒன்றை துவக்கி வைக்க செல்ல உள்ளார். அதனால் மோடியின் பேரணியில் பங்கேற்க அப்பகுதியில் உள்ள பள்ளி பேருந்துகளை அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன் காரணமாக அங்குள்ள பள்ளி ஒன்றில் 8 ம் வகுப்பு படிக்கும் தேவனாஷ் ஜெயின் என்ற மாணவனிடம் ஆசிரியை, பள்ளி பேருந்துகள் பிரதமரின் பேரணிக்கு செல்வதால், செவ்வாய் மற்றும் புதன் பள்ளி விடுமுறை என தெரிவித்துள்ளார் . இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினான். இதனையடுத்து பள்ளி பேருந்தை அனுப்பி வைக்க வேண்டும் என்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் திரும்பபெற்றுவிட்டது

பிரதமர் மோடி தேவனாஷ் எழுதியுள்ள கடிதத்தில் கடிதத்தில் பள்ளி வகுப்புகளை விட உங்களது கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா? அமெரிக்காவில் உங்களின் பேச்சுக்களை நான் கேட்டுள்ளேன். ஆனால் அவர்கள் இந்த கூட்டத்திற்கு பள்ளி பேருந்தில் வரவில்லை. நான் உங்களின் தீவிர ரசிகன். உங்களின் மன் கி பாத் நிகழ்ச்சியை தவறாமல் கேட்டு சக மாணவர்களுடன் விவாதித்துள்ளேன்.

அந்த நேரத்தில் அவர்கள் கிண்டல் செய்தால் சண்டை போட்டுள்ளேன். மத்திய பிரேதச முதலமைச்சர் சிவராஜ் மாமாவிடம், பள்ளி பேருந்துகளை பேரணிக்கு அனுமதிக்க வேண்டாம் என கூறுங்கள். நீங்கள் காங்கிரஸ் தலைவர்கள் போல் இல்லை. எங்களது கல்வி மற்றும் எதிர்காலத்தில் கவனம் கொண்டவர். எனது கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டால், மோடியின் கூட்டத்திற்கு மக்கள் தாங்களாக வந்தார்கள். அழைத்து வரப்படவில்லை என பெருமை கொள்வேன் என்று மனவேதனையுடன் பிரதமர் மோடிக்கு அந்த பள்ளி மாணவன் கடிதம் எழுதியுள்ளான் .

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.