Header Banner Advertisement

அவசர உதவி தொலைபேசி எண்கள் அறிவிப்பு


Emergency help phone

print

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்க அவசர உதவி உதவி தொலைபேசி எண்களை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது :-

சென்னையில் மழை தொடர்பாக 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 044-25367823, 044-25384965 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.044 – 27237107, 044 – 27237207 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 எண்ற எண்ணில் 24 மணி நேரமும், 044 – 27664177 , 044 – 27666746 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது