Header Banner Advertisement

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை 3-2 என வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது


001

print

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை 3-2 என வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்று வெற்றி வாகை சூடியது

மலேசியாவில் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வந்த இறுதிப் போட்டி இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

தொடக்கம் முதலே இருநாட்டு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடிய போதிலும் முதல் காலிறுதி நேரமான 15 நிமிடங்களில் இரண்டு அணி வீரர்களாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை. 2-வது 15 நிமிடத்தில் இந்தியா சிறப்பாக விளையாடி 15 நிமிடத்தில் இந்தியா இரண்டு கோல்கள் அடித்தது. பாகிஸ்தான் ஒரு கோல் அடித்ததால் முதல் பாதி பாதி நேர ஆட்டமான 30 நிமிடத்தில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றது.

3-வது காலிறுதி நேரத்தில் பாகிஸ்தான் வீரர் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது. அதன்பின் 4-வது மற்றும் கடைசி காலிறுதி ஆட்டத்தில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்ததால் இந்தியா 3-2 என முன்னிலைப் பெற்றது. கடைசி 9 நிமிடங்களில் பாகிஸ்தான் கோல் அடிக்க இந்திய வீரர்கள் அனுமதிக்காததால், இந்தியா 3-2 என பாகிஸ்தான் வீழ்த்தி ஆசிய சாம்பின்ஸ் டிராபி கோப்பை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.