Header Banner Advertisement

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேற்றம்


001

print

மலேசியாவில் உள்ள குவான்டன் நகரில், நடைபெற்றுவரும் ஆண்களுக்கான 4வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி ஹாக்கி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது .

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் தென் கொரியாவுக்கு எதிரான அரையிறுதியில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது

இதன் முதல் அரையிறுதியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது. இந்தியா சார்பில் தல்விந்தர் சிங் (15வது நிமிடம்), ராமன்தீப் சிங் (55வது) தலா ஒரு கோல் அடித்தனர். தென் கொரிய அணிக்கு இன்வோ சியோ (21வது நிமிடம்), ஜிஹுன் யாங் (53வது) தலா ஒரு கோல் அடித்தனர். இதனையடுத்து போட்டியின் முடிவு ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது. இதில் அசத்திய இந்திய அணி 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியுள்ளது .