Header Banner Advertisement

தமிழக ஆளுநரின் ஆய்வை பாஜக.,வின் அடிமை அமைச்சர்கள் ஆதரித்து பேசுவதாக அன்புமணி தாக்கு !


Corruption AIADMK anbumani

print

தமிழக ஆளுநரின் ஆய்வை பாஜக.,வின் அடிமை அமைச்சர்கள் ஆதரித்து பேசுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவ ரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி கூறியுள்ளார் .

இது குறித்து கோவை விமான நிலையத்தில் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

ஆளுநரின் ஆய்வை ஆதரித்து அமைச்சர்கள் பேசுவதும் சரியல்ல. அடிமைகள் தான் இவ்வாறு பேசுவர். ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்துவது சட்டத்திற்கும், மரபுக்கும் புறம்பானது. மேலும், ஜெயலலிதா கொள்கைக்கு எதிராக ஆட்சி நடக்கிறது .

ஆளுநர் புகார் வந்தால் அமைச்சர்களை ராஜ்பவனுக்கு அழைத்து பேசலாம். ஆனால் அன்றாடம் நிர்வாகம் செய்வது சரியல்ல.

ஆளுநரின் நடவடிக்கை பற்றி தேவைப்பட்டால் அனைத்து கட்சிகளும் ஜனாதிபதியை சென்று பார்க்கலாம். ஆளுநரின் செயல்பாடு ஜனநாயகத்திற்கு அழகல்ல
தமிழக அரசு மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளது. சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் மட்டுமல்ல ஓபிஎஸ், ஈபிஎஸ் வீடுகளில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அன்புமணி கூறினார்