Header Banner Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி


001

print

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது

இந்தியாவில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க்க இங்கிலாந்து அணி,இந்தியா வந்துள்ளது .

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது. மூன்றாவது டெஸ்ட் மொகாலியில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 283, இந்தியா 417 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்து. ஜோ ரூட் (36), கேரத் (௦) அவுட்டாகாமல் இருந்தனர்.

மொகாலியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் மொகாலியில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 283, இந்தியா 417 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்து. ஜோ ரூட் (36), கேரத் (௦) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. கேரத் டக்-அவுட்டானார். ஜெயந்த் ‘சுழலில்’ பட்லர் (18) ஆட்டமிழந்தார். ஜோ ரூட், ஹமீது ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜோ ரூட் அரை சதம் கடந்தார். இவர் ஜடேஜா ‘சுழலில்’ 78 ரன்களில் அவுட்டானார். ஷமி ‘வேகத்தில்’ வோக்ஸ் (30), ரஷித் (0) அடுத்தடுத்து சிக்கினர். பொறுப்புடன் விளையாடிய ஹமீது அரை சதம் கடந்தார். ஆண்டர்சன் (5) ரன்-அவுட்டாக, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஹமீது (59) மட்டும் அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அஷ்வின் 3, ஷமி, ஜடேஜா, ஜெயந்த் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 103 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. முரளி விஜய் டக்-அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும், பார்த்திவ், புஜாரா ஜோடி சிறப்பாக செயல்பட்டது. பார்த்திவ் 5வது அரை சதம் அடித்தார். புஜாரா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் பார்த்திவ் ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பார்த்திவ் (67), கோஹ்லி (6) அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம், இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 8ல் துவங்குகிறது.