இந்து கடவுளின் உருவங்களை பீர் பாட்டில்களில் பொறித்து அறிமுகப்படுத்திய மது தயாரிப்பு நிறுவனம்


production-introduced-hindu-god-carved-shapes-beer-bottle

print

இந்து கடவுளர்களான கணேசர் மற்றும் விஷ்ணு உருவங்களை பீர் பாட்டில்களில் பொறித்து அம்பரோ மது தயாரிப்பு நிறுவனம்,அறிமுகப்படுத்தி உள்ளதற்கு, இந்துக்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது .

பிரேசில், சாவோ பாலோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அம்பரோ மது தயாரிப்பு நிறுவனத்தின் இந்த செயலை கண்டித்து அமெரிக்கா, நிவேடாவில் உள்ள இந்து இயக்க தலைவர் ராஜன் ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-

இந்து கடவுளர்களின் உருவங்கள் பீர் பாட்டில்களில் அச்சிடப்பட்டுள்ளது முறையற்ற செயல். இதனால், இந்து மதத்தை சேர்ந்தவர்களின் மனம் புண்பட்டுள்ளது.

இந்து கடவுள்கள் கோவில்களிலும், இல்லத்திலும் இந்துக்களால் பூஜிக்கப்படுபவை. இந்த நிலையில் அவற்றை இழிவுபடுத்தும் வகையில் பீர் பாட்டில்களில் இந்து கடவுள்களின் உருவங்களை அச்சிடுவது மிகவும் கண்டிக்க தக்கது. கடவுளர்களை மது விற்பனைக்கு பயன்படுத்தி உள்ளது மரியாதை குறைவான செயல் ஆகும். உலகின் மிகப் பழமையான மதங்களில் முதன்மையானது இந்து மதம். வளமையான ஆன்மிக, யோக தத்துவங்களை தன்னுள் அடக்கியது. இந்த நிலையில் இந்து கடவுளர்களின் உருவங்களையோ, இந்து சின்னங்களையோ சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ தவறாக பயன்படுத்தக் கூடாது என்று ராஜன் ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.