Header Banner Advertisement

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தில் நிலநடுக்கம்


001

print

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாள நாட்டில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள சோலுகும்பு மாவட்டத்தை மையமாக கொண்டு, பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில், இன்று அதிகாலை சுமார் 5.05 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 5.5 அலகுகளாக பதிவானதாக அந்நாட்டின் புவிசார் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கிழக்கு நேபாளத்துக்கு உட்பட்ட பல பகுதிகள் மற்றும் காத்மாண்டு நகரில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.