Header Banner Advertisement

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பு உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல்


OPS EPS

print

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பினர் புதுதில்லி உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளனர்

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சியின் பெயரை பயன்படுத்திக் கொள்ள தோ்தல் ஆணையம் கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா்செல்வம் அணிக்கு வழங்கி உத்தரவிட்டதனால் தோ்தல் ஆணையத்தின் தீா்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட தினகரன் தரப்பு தயாராகி வருகிறது.

இந்த சுழலில் தற்காப்புக்காக கடந்த வாரமே உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பில் இரட்டை இலை விவகாரம் தொடா்பாக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இரட்டை இலை சின்னம் தொடா்பாக ஏதேனும் வழக்கு தொடரப்பட்டால் தங்களை தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்க கூடாது என கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தினகரன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிடலாமா அல்லது புதுதில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடலாமா என தீவிர ஆலோசனையில் உள்ளதால் உச்சநீதிமன்றத்தை தொடர்ந்துஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பினர் புதுதில்லி உயர்நீதிமன்றத்திலும் தனித்தனியாக கேவியட் மனு மனு தாக்கல் செய்துள்ளனர்

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் இரட்டை இலை சின்னத்திற்கு தடை கோரி தினகரனோ அல்லது வேறு யாரோ வழக்கு தொடா்ந்தால் தங்களை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது