Header Banner Advertisement

இளம்பெண்ணை ஆபாசப் படம் எடுத்த திமுகவைச் சேர்ந்த வழக்குரைஞர் கைது !


www.villangaseithi.com

print

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் தெருவில் வசித்து வருபவர் ஒச்சாதேவர், அவரது மகன் செல்வராஜ் (வயது 54) வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். திருமணமான அவருக்கு இரண்டு ஆண்  மற்றும் திருமண வயதில் ஒரு பெண் குழந்தைகள் உள்ளது. திமுகவின் முக்கிய பிரமுகரான அவர் மதுரை மாவட்டம் புறநகர் பகுதியின் ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பின் இணை செயலாளராகவும் உள்ளார். கிரானைட் மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள பி. ஆர். பி. நிறுவனத்தின் நிறுவனரும், பிரபல தொழில் அதிபருமான பி.ஆர். பழனிசாமியின் வழக்குரைஞராகவும் செல்வராஜ் இருந்து வருகிறாராம் .

வழக்குரைஞர் செல்வராஜ் குடிபோதையில் இன்று பிற்பகலில் மதுரை வெண்கலக் கடைத்தெரு பகுதியில் அநாகரீகமாக நின்று கொண்டு அவரது கைபேசியின்மூலம் அப்பகுதியில் சென்ற பெண்களை ஆபாசப் படம் எடுத்துள்ளதாக தெரிகிறது . அவர் அந்த செயலில் தொடர்ந்து ஈடுபடுவதை வணிக நிறுவனங்களில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து தொலைபேசிமூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வித்யா (வயது 23) எனும் இளம் பெண் திருமணத்திற்கு அந்த பகுதியில் உள்ள பிரபல பட்டு மகாலுக்கு ஜவுளி எடுக்க வந்ததாக கூ றப்படுகிறது.

அப்போது திமுகவின் முக்கிய பிரமுகரான வழக்குரைஞர் செல்வராஜ் அவரது கைபேசியின்மூலம் அந்த இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து ரசித்து நக்கல் அடித்ததாக தெரிகிறது.

இளம்பெண் வித்யா அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட, அப்பகுதியில் இருந்தவர்கள் வழக்குரைஞர் செல்வராஜூக்கு தர்ம அடி கொடுத்து விளக்குத்தூண் காவல் நிலையத்தில் அவரை
ஒப்படைத்தனர். இளம்பெண் வித்யா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில்  போலீசார் செல்வராஜை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் யூனியன் சேர்மன் பதவிக்கு திமுகவின் முக்கிய பிரமுகரான வழக்குரைஞர் செல்வராஜூக்கு போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாக திமுக கட்சியின் மகளிரணி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வாக்குறுதி அளித்துள்ளதாக பரவலாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது .