Header Banner Advertisement

உத்திர பிரதேச மக்களுக்கு அமித்ஷா பாராட்டு


amit shah

print

உத்திர பிரதேச மாநிலத்தில் 16 பெருநகரங்கள், 198 நகரசபைகள், 438 பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் அயோத்தி, மதுரா-பிருந்தாவனம், மொராதாபாத், கான்பூர், பிரோஸாபாத், வாரணாசி, கோரக்பூர், லக்னோ, சஹரான்பூர், ஜான்சி, அலகாபாத், ஆக்ரா, காசியாபாத், பரேலி ஆகிய 14 பெருநகரங்களின் மேயர் பதவிகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ள நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அம்மாநில மக்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்

இது குறித்து அம்மாநிலத்தில் நடைபெற்ற நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:

உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பிரதமர் மோடியின் சிறப்பான வழிகாட்டுதல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சிறப்பான ஆட்சியால் பாஜ.க.வுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

குஜராத்தில் காங்கிரஸ் வரும் என்ற கோஷங்களை அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக எழுப்பி வந்தனர். ஆனால், உத்தரப்பிரதேசம் மாநில மக்கள், காங்கிரசே சென்று வா எனக் கூறிவிட்டனர்.

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த வெற்றியை குஜராத் தேர்தலுடன் ஒப்பிடக்கூடாது. ஏனெனில், அங்கு பா.ஜ.க. குறைந்தது 150 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையாக வெற்றி பெறும்,

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அமேதி தொகுதியில் ஆட்சியர் அலுவலகம் செயல்படவில்லை. ஆனால், ராகுல் எங்களுக்கு வளர்ச்சி குறித்து பாடம் நடத்த வந்துவிட்டார் என அமித்ஷா பேசினார்