உலகக் கோப்பை வென்ற இந்திய கபடி வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் மத்திய அரசு அறிவிப்பு


001

print

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கபடி போட்டியில்
சாம்பியன் பட்டம் பெற்று கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

புதுதில்லியில் உள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் வீட்டில் இன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது வீரர்களின் திறமையை பாராட்டிப் விஜய் கோயல் பேசியதாவது :-

உலகக் கோப்பையை வென்ற கபடி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தனித்தனியாக கவுரவிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் மத்திய அரசு சார்பில் வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டை சேர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

உலகக் கோப்பையை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சேரலாதன் பாராட்டு விழாவிற்குப் பிறகு ‘ பேசியதாவது :-

எனது ஓய்வுக்குப் பின் தமிழகம் முழுவதும் வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளிப்பேன். தமிழகத்தில் இருந்து நிறைய கபடி வீரர்கள் உருவாக வேண்டும்’ என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் .

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.