உலக கோப்பை கபடி போட்டி பைனலுக்கு இந்தியா தகுதி


002

print

உலக கோப்பை கபடி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது.அரையிறுதியில் 73-20 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை தோற்கடித்தது.

ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் 3வது உலக கோப்பை கபடி பங்கேற்கும் போட்டியில் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, தாய்லாந்து அணியை எதிர்கொண்டதில் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 73-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதியில் தென் கொரியா, ஈரான் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஈரான் அணி, 28-22 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது.

இன்று நடைபெறும் பைனலில் ஈரான்,இந்தியா, அணிகள் மோதுகின்றன.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.