Header Banner Advertisement

அமெரிக்க நகரங்களை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றியை கொண்டாடிய வடகொரியா


North Korea launches missile test Success

print

அமெரிக்க நகரங்களை தாக்கும் ஏவுகணை சோதனையின் வெற்றி விழாவாக பேரணி, வாண வேடிக்கை, நடனம் என வடகொரியா கொண்டாடியது

அமெரிக்காவின் எந்தவொரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஹவாசாங்-15 ரகம்) வடகொரியா கடந்த 29ம் தேதி ஏவி சோதித்தது.

வடகொரியா இதுவரை ஏவி சோதித்த அத்தனை ஏவுகணைகளையும் மிஞ்சுகிற விதத்தில் இந்த ஏவுகணை, 4 ஆயிரத்து 475 கி.மீ. உயரத்துக்கு செங்குத்தாக பாய்ந்து, 53 நிமிடங்களில் 960 கி.மீ. தொலைவுக்கு பறந்து, ஜப்பான் கடலில் விழுந்தது.

இந்த ஏவுகணை சோதனை அமெரிக்காவை மட்டுமல்லாது உலக நாடுகளையெல்லாம் அசைத்திருக்கிறது. வடகொரியா அணு ஆயுத நாடாகி உள்ளது, ஏவுகணைகளை ஏவுகிற வல்லமை படைத்த நாடாகி இருக்கிறது என அதன் தலைவர் கிம் ஜாங் அன் அறிவித்துள்ளார்.

இந்த கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். நடனம், வாணவேடிக்கை, பேரணி என கொண்டாட்டத்தில் களை கட்டியது. வாண வேடிக்கை கண்களைப் பறிக்கும் விதத்தில் அமைந்தது.

இருப்பினும் இந்த வெற்றி கொண்டாட்டத்தில் கிம் ஜாங் அன் பங்கேற்கவில்லை. பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில் இந்த வெற்றி கொண்டாட்டத்தில் ராணுவ தளபதிகள், ஆளுங்கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட து குறிப்பிடத்தக்கது