Header Banner Advertisement

ஒடிசா முதலமைச்சருக்கு புத்தமத துறவி தலாய் லாமா பாராட்டு


Chief Minister Odisha Dalai Lama Appreciation

print

நாட்டுக்காக நீண்ட நாட்களாக உழைத்து வரும் முதலமைச்சர்களில் ஒடிசா மாநிலத்தினை சேர்ந்த நவீன் பட்நாயக்கும் ஒருவர் என திபெத் நாட்டை சேர்ந்த புத்தமத துறவி தலாய் லாமா பாராட்டி உள்ளார்

இரண்டு நாள் பயணமாக ஒடிசா மாநிலத்துக்கு நேற்று வந்த தலாய் லாமா முதலமைச்சர்
நவீன் பட்நாயக்கை அவரது வீட்டில் சென்று சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் தலாய் லாமா கூறியதாவது :-

நாட்டுக்காக நீண்ட நாட்களாக உழைத்து வரும் முதலமைச்சர்களில் நவீன் பட்நாயக்கும் ஒருவர். ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே போல் அல்லாமல், நவீன் பட்நாயக் தேர்தல் முறையில் ஆட்சியை பிடித்துள்ளார். மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் மரியாதையை அவர் காப்பாற்றி வருகிறார். அதனால் நானும் அவரை பாராட்டி பேசினேன் என்று கூறினார்

அப்போது தலாய் லாமாவின் பாராட்டு மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறினார்