Header Banner Advertisement

கடவுளை பற்றிய வீண் வாதம் வேண்டாம் ஏன் ?


002

print

சாதாரண ஜனங்கள் மூட்டை மூட்டையாக தர்மத்தை பற்றி பேசுவார்கள் ,ஆனால் எள்ளளவேனும் அதன் படி நடக்க மாட்டார்கள் ,ஞானியோ ,தனது வாழ் நாள் முழுவதும் தர்மத்தையே கடை பிடித்து நடப்பினும் அதை பற்றி சிறிதும் வெளியே பேசுவதில்லை .,

குடத்தில் தண்ணீர் மொள்ளும் போது பக் பக் என சப்தம் உண்டாகும் – குடம் நிரம்பியதும் அந்த சப்தம் நின்று விடும் .,அது போல் ஈஸ்வரனை காணாதவன் ,ஈஸ்வரனை பற்றிய வீண் வாதங்கள் நிரம்பியவனாக இருக்கின்றான் ,ஆனால் ஈஸ்வரனை கண்டதும் மௌனமாகி ,அந்த திவ்யத்தையே அனுபவிக்கின்றான் .,

ஒரு வீட்டில் நடக்கும் விருந்துக்கு அநேகரை அழைத்தால் ,முதன் முதலில் அவர்கள் போடும் சப்தம் வெகு மும்மரமாக கேட்கும் ,சாப்பிட உட்காரும் வரையில் அந்த சப்தம் இருக்கும் .,இலையில் அன்னம் பரிமாறி ,விருந்தினர்கள் சாப்பிட தொடங்கியதும் முக்கால் வாசி சப்தம் நின்யோழியும் ,கடைசியாக தயிர் பரிமாறியதும் அதை புசிக்கும் உஸ் உஸ் சப்தம் ஒன்று தான் கேட்கும் ,விருந்து முடிந்ததும் நித்திரைக்கு போவார்கள் .,

ஈஸ்வரனது சமீபத்தில் போக போக ,விசாரணையும் கேள்விகளும் குறைகின்றன ,அவனையனுகியதும் ,அவனை உண்மை சொரூபி என நேரில் கண்டதும் ,எல்லா சப்தமும் எல்லா விவாதங்களும் முற்றிலும் நின்று விடும் ,அப்போது தான் நித்திரை காலம் வருகிறது ,அதாவது ஈஸ்வரனுடைய திவ்விய ரூபத்தில் திளைக்க கூடிய சமாதி நிலைமையில் ஆனந்தம் அனுபவிக்கும் காலமாகும் .,

தேனியானது ,புஷ்பத்தின் உள்ளே இருக்கும் தேனை அடையமால் இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் பண்ணி கொண்டு பூவை சுற்றி சுற்றி வரும் ,ஆனால் பூவுக்குள் நுழைந்து விட்டால் ,அமிருத்தத்தை சப்தம் செய்யாமல் குடிக்கிறது .,

கொள்கைகளையும் -சித்தாத்தங்களையும் பற்றி ஒருவன் சண்டையிடும் வரையில் அவன் உண்மை பக்தியாக அமிர்தத்தை சுவை பார்க்க மாட்டான் ,ஆனால் அவன் அதை வாஸ்தவத்தில் சுவை பார்ப்பானாகில் ,வெகு சாந்தனாய் மனம் சமாதானமும் அடைவான் .,

புதிதாக வேறு பாஷை பழகுபவன் ,தான் பேசும் போதெல்லாம் ,அப்பாஷையின் வார்த்தைகளை உபயோகித்து தனது விற்பத்தை வெளியே காட்டி கொள்வான் .,ஆனால் பாஷை நன்றாய் கற்று கொண்டவனோ அதன் வார்த்தைகளை ,தன தாய் பாஷை சம்பாஷிக்கும் போது உபயோகிப்பதில்லை .,சமய வாழ்க்கையில் வெகு தூரம் முன்னேற்றம்
அடைந்தவர்களுடைய சுபாவமும் இப்படி பட்டதே .,அவர்கள் வெளியில் காட்டி கொள்ள மாட்டார்கள் .,

ஒரு மனிதன் சந்தை கடைக்கு வெகு தூரம் நின்றிருக்கும் போது உருத்தெரியாத “ஹோ” என்ற் சப்தத்தை மட்டும் கேட்கிறான் ,ஆனால் அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ,ஒருவன் உருளை கிழங்கு பற்றி பேசுவதும் ,இன்னொருவன் கத்தரிக்காய் பற்றி பேசுவதும் பேரம் பண்ணுவதும் ஸ்பஷ்டமாக கேட்கிறான் .,அது போல .,

ஒருவன் ஈஸ்வரனிடருந்து வெகு தூரத்தில் இருக்கும் வரையில்அவன் குழப்பத்திலும் காரண காரியவாத பிரதிவாத அமளியிலுமே இருப்பான் .,அனால் அவன் ஈஸ்வரனை நெருங்கும் காலத்தில் காரண காரிய பிரதிவாதம் எல்லாம் நின்று விடும் ,தெய்வீக ரகசியங்களை எல்லாம் வெகு தெளிவாயும் ஸ்பஷ்ட மாயும் அறிந்து கொள்கின்றான் .,

சுடாத மாப்பலகாரம் ஒன்றை காய்ந்து கொண்டிருக்கும் நெய்யில் போட்டால் ,முதலில் பட படவென்ற சப்த முண்டாகும் ,அப்பலகாரம் பொரிய பொரிய அதன் சப்தம் அடங்கு குறைந்து விடும் .,முற்றிலும் பொரிந்து விட்டால் சப்தமெல்லாம் நின்று விடும் .,அது போல .,
ஒருவனிடம் ஞானம் அற்பமாய் இருக்கும் வரையில் அவன் வாதம் புரிந்து ,பிரசங்கமும் -பிரசாரமும் செய்து கொண்டு போகின்றான் .,ஆனால் ஞானம் பூர்த்தி அடைந்ததும் இவ்விதமான வீண் படோபங்க்களில் அவன் மனம் செல்வதில்லை .,

நீதி :- சர்வ சக்தி வாய்ந்த கடவுளுடைய அருள் கடாச்சம் வந்து அடையும் போது ஒவ்வொருவரும் தன குற்றத்தை காண்பான் .,இதனை அறிந்து நீ வீணே தர்க்கம் செய்யாதே .,
“வாதத்தில் வென்றாரே தோற்றார் ஏனெனில்
அதில் விஞ்சிய மனக்கசப்பைக் காண்.”
என்கிறார் ஒரு மனத்தத்துவ அறிஞர்.

இராமகிருஷ்ணபரமஹம்சர் அருளியது