Header Banner Advertisement

கட்டுமான பணிகள், தொழில்துறை நடவடிக்கைகளுக்கு தடை


Ban

print

புதுதில்லியில் காற்று மாசு ஏற்பட்டு உள்ளதால் அங்கு கட்டுமான பணிகள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

புதுதில்லி மற்றும் பிராந்திய பகுதிகளில். காற்றில் நுண்துகள்களின் (பி.எம்.2.5 மற்றும் பி.எம்.10) அளவு வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. இந்த நச்சுக்காற்றால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

பனிப்பொழிவும் அதிகம் இருப்பதால் தலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகலிலும் மேகமூட்டம் போல காணப்படுகிறது. அருகில் இருக்கும் பொருட்களையோ, நபர்களையோ கூட மக்களால் பார்க்க முடியவில்லை. இதனால் சாலைகளில் தொடர் விபத்துகள் அரங்கேறி வருகின்றன.

இந்த சுற்றுச்சூழல் அவசர நிலையால் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவில் கூறியுள்ளதாவது :-

அடுத்த உத்தரவு வரும் வரை புது தில்லியில் கட்டுமான நடவடிக்கைகளுக்கும், அதிக மாசுக்களை உமிழும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கும் 14-ந் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது
மேலும் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த லாரிகளும், கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளும் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது . அத்துடன் குப்பைகளை எரிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

இந்த சுழலில் புதுதில்லி மாசு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்றம் புதுதில்லி யில் மாசுக்களை உடனடியாக கட்டுப்படுத்த ‘மேக விதைப்பு’ மூலம் செயற்கை மழையை உருவாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசை கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது