Header Banner Advertisement

கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


Rain

print

கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 12 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக்கல் மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்