Header Banner Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தினை தாக்கிய ஒக்கி புயல் விலகல்


oki Storm

print

கன்னியாகுமரி மாவட்டத்தினை தாக்கிய  ஒக்கி புயல், அங்கிருந்து விலகிச் சென்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-

திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் தற்போது ஒக்கி புயல் மையம் கொண்டுள்ளது. ஒக்கி புயல் விலகிச் சென்றதால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இனி பாதிப்பு இல்லை. புயல் சின்னமானது லட்சத்தீவை நோக்கி நகர்ந்து வருகிறது.

ஒக்கி புயல் தீவிரமடைந்து லட்சத்தீவை நோக்கி நகருவதால் கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, தென் தமிழகம், தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் தெற்கு கேரளாவில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். அதன் பிறகு மழை அளவு படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.

புயல் சின்னமானது லட்சதீவு நோக்கி நகர்வதால் கடல் பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயங்களில் மணிக்க 85 கி.மீ., வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும். தெற்கு கேரளாவில் அடுத்த 48 மணிநேரத்திற்கும், தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது