Header Banner Advertisement

குமரி மாவட்டத்தினை புரட்டி போட்ட ஓகி புயல்


Kanyakumari oki storm

print

வங்கக் கடலில் உருவாகி, அரபிக் கடல் பகுதிக்கு நகர்ந்த ஓகி புயலின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஓகி புயலால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிக்குளம் பகுதியில் முறிந்த மரங்களை தீயணைப்பு வீரர்கள் அகற்றி வருகிறார்கள்.

ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை  முதலே சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், ஆயிரகணக்கான மரங்கள், மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததால் , பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கின. மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட,கைபேசிகளை பயன்படுத்த முடியாத சூழலில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

ஓகி புயல் காரணமாக நாகை துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரிக்கு தெற்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஓகி புயல், லட்சத் தீவை நோக்கி நகரும் என்றும், இது மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது

கேரளாவில், திருவனந்தபுரம், ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, பத்தனந்திட்டா மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த புயல், லட்சத்தீவில் மையம் கொண்ட பின் கடலிலேயே வலுவிழக்கும். ஆனால், ‘கடல் சூழல் சாதகமாக இருந்தால், வட கிழக்காக கோவா, மும்பை கடற்கரை நோக்கி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரும்’ என, அமெரிக்காவின் சர்வதேச புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை தொடர்வதால், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்