Header Banner Advertisement

கரூரில் 86 லட்சம் பணமோசடியில் ஈடுபட்ட கணக்காளர் சிறையிலடைப்பு ! இளம் பெண்ணுக்கு போலீஸ் வலை வீச்சு


Prisoner jail

print

கரூரில் தனியார் நிதிநிறுவனத்தில் சுமார் 86 லட்சம் பணமோசடியில் ஈடுபட்ட கணக்காளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.உதவிகணக்காளரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

.கரூரைஅடுத்தபசுபதிபாளையம் அருணாச்சலம் நகரில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் வடக்குபிரதட்சணம் சாலையில் கரூர் பைனான்ஸ் பிலிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் கடந்த 18 வருடங்களாக நடத்தி வரு கிறார்

இந்த நிறுவனத்தில் கணக்காளாராக தெற்கு காந்தி கிராமத்தை சார்ந்த தண்டபாணியும், உதவி கணக்காளராகவும் பசுபதிபாளையத்தைசார்ந்த சுதாஎன்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றிவருகின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து கடந்த 20.09.2012 முதல் நேற்றுமுன்தினம் வரை 86 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கணக்கில் முறைகேடு செய்துபணத்தைகையாடல் செய்துவந்துள்ளனர். இவை கடந்தவாரம் நிதிநிறுவனத்தில் நடந்ததணிக்கையின் போது முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ராஜேந்திரன் கரூர் நகர காவல் நிலையத்தில் அவர்கள் இருவர் மீது பணமோசடி புகார் அளித்தார் .

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கணக்காளர் தண்டபாணியை
கைது செய்து சிறையில் அடைத்தனர். தலை மறைவாக உள்ள உதவி கணக்காளர் சுதாவை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்