Header Banner Advertisement

கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி


Karthi Chidambaram CBI

print

இங்கிலாந்து நாட்டில் செயல்பட்டுவரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது சேர்ப்பதற்காக கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளனர்

மத்தியில் முன்பு நடைபெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா குழுமம் மொரீசியஸ் நாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத்தந்ததாகவும், இதற்காக அவரது மறைமுக கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் ஐ.என்.எஸ். மீடியாவிடம் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததுகுறிப்பிடத்தக்கது

. டிசம்பர் 1-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள் இங்கிலாந்து சென்றுவிட்டு இந்தியா திரும்பி விட வேண்டும் என்றும், இதுபற்றிய உத்தரவாதத்தை 3 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.