Header Banner Advertisement

கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதிய இந்திய அணி தோல்வி


001

print

புதுதில்லி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதிய இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தரம்சாலாவில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்தியா, 1-0 என, தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி, டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு கப்டில், டாம் லதாம் ஜோடி துவக்கம் தந்தது. உமேஷ் வீசிய 2வது பந்தில் கப்டில் (0) போல்டானார். லதாம் (46), ராஸ் டெய்லர் (21) அடுத்தடுத்து அவுட்டாகினர். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த வில்லியம்சன், ஒருநாள் அரங்கில் 15வது சதம் அடித்தார். மிஸ்ராவிடம், ஆண்டர்சன் (21) சிக்கினார். வில்லியம்சன் 118 ரன்களில் அவுட்டானார். ரான்கி (6) சொதப்பினார். தேவ்சிச் (7), சவுத்தீ (0), ஹென்றி(6) மூவரையும் பும்ரா அவுட்டாக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. பவுல்ட் (5), சான்ட்னர் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ரகானே ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ரோகித் சர்மா 12 ரன் எடுத்தார். கோஹ்லி (9) இம்முறை கைவிட்டார். ரகானே (28), மணிஷ் பாண்டே (19) சீரான இடைவெளியில் திரும்ப, இந்திய அணி சிக்கலில் (73/4 ரன்) சிக்கியது. சற்று தாக்குப் பிடித்த கேதர் ஜாதவ், 41 ரன்னும், தோனி 39 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். அக்சர் படேல் (17), அமித் மிஸ்ரா (1), கப்டிலின் ஒரே ஓவரில் அவுட்டாகினர். கடைசி நேரத்தில் பாண்ட்யா, உமேஷ் யாதவ் இணைந்து வெற்றிக்கு போராடிய போதும், இதற்கு பலன் கிடைக்கவில்லை.

சவுத்தீ வீசிய இந்த ஓவரின் 3வது பந்தில் பும்ரா (0) போல்டாக, இந்திய அணி 49.3 ஓவரில், 236 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. உமேஷ் யாதவ் (18) அவுட்டாகாமல் இருந்தார்.

பாண்ட்யா 36 ரன்னுக்கு அவுட்டாக, கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டன.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.