Header Banner Advertisement

குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியவர்களை மிரட்டி அவமானப்படுத்திய காவல் ஆய்வாளர் …!


Attack police

print

மதுரை மாநகராட்சி வார்டு எண் 77க்கு உட்பட்ட வசந்தநகர் ராமலிங்கநகர் மூன்றாவது தெருவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்களுடன் சி-1 சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற வழக்கறிஞர் மற்றும் செய்தி ஆசிரியரை காவல் ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் பொதுமக்கள் மத்தியில் சட்டையை பிடித்து இழுத்து தரக்குறைவாக நடத்தி வக்கீல்.,பிரஸ்காரன் என்றால் என்ன என தகாத வார்த்தைகளால் திட்டி காவல் வாகனத்தில் ஏற்றி செல்போனை பிடுங்க முயற்சித்தும் என்ன..? எங்களிடமே சட்டம் பேசுறியா..? உங்களுக்கு எல்லாம் மரியாதை கொடுத்து பேசறதே தப்பு ..உங்கள் இருவரையும் எப்.ஐ .ஆர் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் விடுவேன் என மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது .

மதுரை மாநகராட்சி உட்பட்ட வார்டு எண் 77க்கு வசந்த நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் ஒன்று கடந்த பல வருடங்களுக்கு முன் வியாபார நோக்கில் உருவாக்கிய அக்ரினி மற்றும் வசுத்ரா அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக ராட்சத ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து வருகிறது. அந்த தனியார் கட்டுமான நிறுவனம் அங்கு சுயநல நோக்கில் சட்டத்திற்கு புறம்பாக ராட்சத பல ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தமைக்காக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளாமல் இருந்ததால் நாங்கள் வசித்து வரும் தெரு உட்பட சுற்றுவட்டார தெருக்களில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நிலத்தடி நீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுவது மட்டுமல்லாமல் மதுரை மாநகராட்சியால் வீடுகளுக்கு வழங்கப்படும் குடி நீரையே நம்பி வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர் .

இந்த நிலையில் மேடான பகுதியில் உள்ள மேற்படி தெருவிலுள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் மதுரை மாநகராட்சின் பிரதான குடிநீர் வழித்தடம் மூலமாக குறைந்த அழுத்தத்தில் குடிநீர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்து வருவதால் எங்களுக்கு மிகவும் கால தாமதமாகவே குடிநீர் கிடைக்கிறது .சில நேரங்களில் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. அதனை சரி செய்ய பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் பல வருடங்களாக பலமுறை புகார் தெரிவித்தபோதிலும் இது நாள் வரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.

மேற்படியான சின்டெக்ஸ் டேங் உள்ள பொது இடத்தின் அருகில் எவரும் பயன்படுத்தாத காலியான வீட்டுமனை மட்டுமே உள்ள சுழலில் கடந்த சில மாதங்களுக்கு முன் வார்டு எண் 77 ன் உதவிப் பொறியாளராக பதவியேற்ற சங்கிலி ராஜூக்கு அதிகாரம் படைத்த நபர் ஒருவர் அவருக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து அந்த சின்டெக்ஸ் டேங் பொது இடத்தில் இல்லை என்று ஒரு பொய்யான புகாரை கொடுத்து அந்த சின்டெக்ஸ் டேங்கை அகற்ற முயற்சிப்பதாகவும் அதனை எப்படியும் அகற்றி அந்த மேடையை விடமாட்டேன் என சங்கிலி ராஜ் உறுதி அளித்தாக அவரது அலுவலகத்தில் அவருக்கு கீழ் பணியாற்றும் நேர்மையான ஊழியர்கள் அப்பகுதி மக்களிடம் கூறியதாக பரவலாக பேசப்பட்டது.

இதையடுத்து கடந்த 10-05-2018 அன்று அப்பகுதி மக்கள் கூட்டாக கையெழுத்திட்டு உதவிப் பொறியாளர் சங்கிலி ராஜிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர் . அந்த மனுவில் மேற்சொன்ன தகவல்களை குறிப்பிட்டு பொதுமக்கள் வரிப்பணத்தில் மாநகராட்சியில் வாங்கப்பட்டு பல்லாயிரம் ரூபாய் செலவில் பொதுமக்கள் செலவில் பொது இடத்தில் மேடை அமைத்து வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் டேங்க்கினை அகற்றி அந்த மேடையை இடிக்கும் திட்டம் ஏதும் இருப்பின் அதனை கைவிடவேண்டியும்., மேற்படியான சின்டெக்ஸ் டேங் குழாய் உள்ள அமைப்பினை மாற்றி வேறு பக்கமாக வைத்தால் எவரும் பார்க்காத நேரத்தில் அப்பாதையில் செல்லும் வாகனங்கள் அந்த சின்டெக்ஸ் டேங்க்கின் மீது மோதினால் டேங்க் சேதம் அடையும் என்பதால் முன் எச்சரிக்கையாக அத் திட்டம் ஏதும் இருப்பின் அதனை கைவிட வேண்டியும் பொது இடத்தில் சின்டெக்ஸ் டேங் வைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் வசிக்கும் தெருவில் உள்ள பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ எவ்விதமான இடையூறும் இல்லை என நாங்கள் அனைவரும் உறுதி என்று கூறியுள்ளனர். 

அந்த மனுவினை பெற்றுக்கொண்ட உதவிப் பொறியாளர் சங்கிலிராஜ் மேற்படியான சின்டெக்ஸ் டேங்க் கண்டிப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அந்த தொட்டியில் ஒருநாள் விட்டு ஒருநாள் ஒருமுறை மாநகராட்சி லாரி மூலம் குடிநீர் கொண்டுவந்து அதில் நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக 10-05-2018 அன்று வாய்மொழியாக உறுதியளித்தார்.

இந்த சுழலில் கடந்த 16-05-2018 மதியம் சுமார் 2.00 மணியளவில் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அந்த சின்டெக்ஸ் டேங்க்கை டிராக்டரில் எடுத்து சென்று பல்லாயிரம் ரூபாய் செலவிட்டு பொதுமக்களால் அமைக்கப்பட்ட அதன் மேடையை அராஜக மாக இடிக்க முற்சித்தார். அப்போது அதனை தடுத்து நிறுத்திய பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர் அன்றே மண்டலம் எண்-4ன் உதவி ஆணையாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து சங்கிலிராஜின் அராஜக நடவடிக்கைக்கு எதிராக புகார் அளித்தனர் .

இதனால் அப்பகுதி மக்கள் மீது ஆத்திரம் கொண்ட சங்கிலிராஜ் மேற்படியான பகுதிக்கு மாநகராட்சி குடிநீர் கிடைக்காத படி பல்வேறு இடையூறுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது .

இந்த சுழலில் மேற்படியான பகுதிக்கு மாநகராட்சி குடிநீர் கிடைக்காததால் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது வெறுப்படைந்த பொதுமக்கள் அதிகாரிகளின் மெத்தன நடவடிக்கையை கண்டித்து கடந்த 01-05-2018 மதியம் சுமார் 1.00 மணியளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் மலைச்சாமி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குடிநீர் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் வழங்கவில்லை என்றால் காவல் நிலையத்தில் வந்து புகார் அளிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார் .

இந்த நிலையில் மேற்படியான பகுதிக்கு உதவிப் பொறியாளர் சங்கிலிராஜ் டிராக்டர் மூலம் பெயரளவிற்கு குடிநீர் சப்பளை செய்து விட்டு அதன்பின்னர் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு மாநகராட்சியால் வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் குடிநீர் வழங்கவோ அல்லது டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கவோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் அப்பகுதி மக்கள் மீது வெறுப்பு கொண்டு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் சார்பாக அப்பகுதியில் வசிப்பவரும் வில்லங்க செய்தி தமிழ் இணையதளத்தின் செய்தி ஆசிரியருமான எம்.ஜி முரளி கிருஷ்ணன் என்பவர் நேற்று 02-06-2018 மாநகராட்சி ஆணையாளரிடம் கைப்பேசி மூலம் குற்றம்சாட்டி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தாக தெரிகிறது .மேலும் மேற்படி சம்பவங்களை பொதுமக்கள் சார்பாக வழக்கறிஞர் ரவி மற்றும் செய்தி ஆசிரியர் எம்.ஜி முரளி கிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று 02-06-2018 இரவு சி-1 சுப்பிரமணியபுரம் காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளர் மலைச்சாமியிடம் மேற்படி சம்பவங்களை கூறி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வாய்மொழியாக கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. அப்போது அவர் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் சார்பாக எழுத்து மூலம் புகார் அளிக்க கூறினராம் .

இந்த சூழலில் இன்று 02-06-2018 மாலை 5 மணி ஆகியும் அப்பகுதியில் குடிநீர் கிடைக்காதல் அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் வழக்கறிஞர் ரவி மற்றும் செய்தி ஆசிரியர் எம்.ஜி முரளி கிருஷ்ணன் ஆகியோர் காலிக்குடங்களுடன் எவரும் சாலைமறியலில் ஈடுபடக்கூடாது எனக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்க அழைத்து சென்றுள்ளனர்.அப்போது முன்னால் சென்ற சிலர் திடீரென காலிக்குடங்களை சாலையில் வைத்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் பெண்கள் உள்ளிட்டோரை தகாத வார்த்தைகளால் திட்டி கையைப் பிடித்து இழுத்து விரட்டியடித்தனர் .

மேலும் வழக்கறிஞர் ரவி மற்றும் செய்தி ஆசிரியர் எம்.ஜி முரளி கிருஷ்ணன் ஆகியோரை காவல் ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் பொதுமக்கள் மத்தியில் சட்டையை பிடித்து இழுத்து தரக்குறைவாக நடத்தி வக்கீல்.,பிரஸ்காரன் என்றால் என்ன என தகாத வார்த்தைகளால் திட்டி காவல் வாகனத்தில் ஏற்றி செல்போனை பிடுங்க முயற்சித்தும் என்ன..? எங்களிடமே சட்டம் பேசுறியா..? உங்களுக்கு எல்லாம் மரியாதை கொடுத்து பேசறதே தப்பு ..உங்கள் இருவரையும் எப்.ஐ .ஆர் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் விடுவேன் என மிரட்டல் விடுத்தனர். மேலும் நடந்த சம்பவத்தினை காவல் ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்களிடம் அவர்கள் கூற முயற்சித்தும் அவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.

பொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களது அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் பணவெறிபிடித்து வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு அதிகார தோரணையில் பொதுமக்களுக்கு எதிராக செயல்பட்டு அராஜக அட்டகாசத்தில் ஈடுபடுவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது .