Header Banner Advertisement

கோபத்தினாலே உருவாகும் வியாதிகள் !


www.villangaseithi

print

 

மனோரீதியான கோளாறுகள் தேகத்தில் பாதிப்புகளையும்… தேகரீதியான கோளாறுகள் மனோரீதியான பாதிப்புகளையும் கொடுக்கும்…

அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர் தம்மை கட்டுப்படுத்த இயலாத நிலை அடைவார்… பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்களையும் செய்வார்.. அதிக உணர்ச்சிகள் காரணமாக முகம் சிவந்துபோகும்
வியர்த்து கொட்டும.. முகம் விகாரமாகும்

விபரீதமாக சிரிப்பர்… ஒரேயடியாக அழுவர்… அதிக உணர்ச்சி..உணர்ச்சிவசப்படுதல் அபாயமான எச்சரிக்கைகள்..

கோபம் நாம் அறிந்த உணர்வு.. கோபமுற்றவர்… என்ன பேசுகின்றோம்..ஏது பேசுகின்றோம் என்று உணராமல்… பின் விளைவுகளோ..வேறு எந்த விளைவுகளோ எதைபற்றியும் கவலைபடாமலும்…

யாரிடம்..எங்கே பேசிகொண்டிருக்கின்றோம் என்று உணராமலும்

கடுமையான வார்த்தைகள்..தாக்குதல்.. இழிவு செய்தல் மூலம் தனது உணர்வை வெளிப்படுத்திவிடுவர்… இது வழக்கமாக எங்கும் நடைபெறும் செயல்கள்தான்…நானும் செய்வேன்..நீங்களும் செய்வீர்கள்..சுத்தமாக இல்லவே இல்லையென்று சொல்லிவிட முடியாது…

அதற்காக கோபத்தை உடனடியாக கட்டுப்படுத்திக்கொள்ள முற்பட்டால் வார்த்தைகள் குளறிவிடும்… அதிக தாகமும்… மயக்கமடைந்ததுபோல் உணர்வர்…

எந்த செயல்பாடும் செய்யவியலாது… கீழே விழுந்துவிடும் நிலையோ..அல்லது மற்றவர்களை பயமுறுத்தும் வகையில் குறிப்பிட்ட திசைநோக்கி அச்சடித்ததுபோல் இருந்துவிடுவர்….

ஞாபசக்தி குறைவு…வாயுத்தொல்லை..அதிக வியர்வை..தலைச்சுற்றல்.. முகசோகை போன்றவைகளும் அதிகபடியான கோபத்தினாலேயே உண்டாகின்றது…

எளிதில் கோபமடைபவர்கள் முன்யோசனையின்றி செயல்பட்டு அதிக நஷ்டங்களை எதிர்கொள்வர்… சண்டைகுனம் உடையவராக பிறர்மத்தியில் சித்தரிக்கபட்டு ஒதுக்கப்படுவீர்கள்
அதுவே பாதி மனஉளைச்சலை கொடுக்கும்…

அமைதியான..துணிச்சலான…அழகான வாழ்வை விரும்புபவர்கள்..பயிற்சிகள் மூலம் கோபம் வராமல்… எல்லாவற்றையும் ஆராய்ந்து செயல்பட பழகலாம்…. பழகுவோம்.