Header Banner Advertisement

சிறைக்கைதி சசிகலா முறைகேடுகளை அம்பலப்படுத்திய கர்நாடக மாநில ஐ.பி.எஸ் ரூபா அதிரடி


DIG Rupa SASIKALA

print

சொத்து குவிப்பு வழக்கில தண்டனை பெற்று, கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கைதி சசிகலாவுக்கு சிறையில் விதிமுறைகளை மீறி, பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக, சிறைத்துறை, டி.ஜி.பி.,யாக இருந்த, சத்ய நாராயணராவ், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியிரு ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா ‘ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி, சத்ய நாராயணராவ் அனுப்பிய, மான நஷ்ட வழக்கு நோட்டீசுக்கு, அஞ்ச மாட்டேன். சட்டப்படி, அவர் மீது வழக்கு தொடருவேன்,” என பெங்களூரில் அவர் தடாலடியாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரி வினய்குமார் தலைமையில், உயர்மட்ட விசாரணை குழு விசாரணை முடிந்து, அரசுக்கு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது