செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பயன்பாடு குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு வெளியீடு


001

print

வங்கிகள், தபால் நிலையங்களில் நாளை முதல் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் சில சேவைகளுக்கு மட்டும் டிசம்பர் 15 வரை செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்த காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது .

பாஜகவின் மோடி அரசாங்கம் நிர்வாக திறன் இன்றி முட்டாள் தனமாக சரியான திட்டமிடலின்றி முடிவெடுத்து ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்து நடுத்தர மக்களை அல்லோலப்பட விடுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி கொந்தளிப்புடன் கூறி புலம்பி வருகின்றனர்

கடந்த 10-ந்தேதியில் இருந்து வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகிறார்கள். இதற்காக அதிகாலையில் இருந்தே காத்துக்கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் கடந்த ஒருவாரமாக சில்லரை தட்டுப்பாடுகளால் கடும் அவதியை சந்தித்து பரிதவிக்கின்றனர்.

பிரதமரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து உள்ளன. உரிய முன்னேற்பாடுகளை செய்யாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ள சேவைகளாவது :-

நாளை முதல் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிக்கணக்கில் செலுத்த மட்டுமே முடியும். வங்கிகளில் சில்லறை பெற முடியாது.

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளைகளை பழைய ரூபாய் நோட்டுகள் செலுத்தி பெறலாம்.

குடிநீர், மின்கட்டணம் செலுத்த பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம்.

வெளிநாட்டினர் தங்களது நாட்டு பணத்தை வாரத்துக்கு ரூ.5000 என்ற அளவில் தங்களது பாஸ்போர்ட்டுகளை காண்பித்து வாங்கிக் கொள்ளலாம்.

மத்திய, மாநில, மாநகராட்சி பள்ளிகளில் பழைய 500 ரூபாய் தாள்களை பயன்படுத்தி கல்வி கட்டணம் செலுத்தலாம்.

கூட்டுறவு அங்காடிகளில் ஒரே நேரத்தில் 5000 ரூபாய் வரை பொருட்கள் வாங்கலாம்.

பழைய 500 ரூபாய் பயன்படுத்தி மொபைல்களில் பிரீபெய்டு டாப்-அப் செய்து கொள்ளலாம்.

டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.

500 ரூபாய் நோட்டை பயன்படுத்தி டிசம்பர் 3-ம் தேதி முதல் டிசம்பர் 15 வரை சுங்கக்கட்டணம் செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.