Header Banner Advertisement

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுவதாக அறிவிப்பு


Japan announced resignation king

print
ஜப்பான் நாட்டில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரமே இல்லாத நிலையில் தற்போதைய 125-வது மன்னரான அகிஹிட்டோ (வயது 83) வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பதவி விலக உள்ளதாக பிரதமர் ஷின்சோ அபே இன்று அறிவித்துள்ளார்
 
ஜப்பானில் கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகிய பின்னர் எவரும் பதவி விலகியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
மன்னர் அகிஹிட்டோ பதவி விலகிய மறுநாள் அவரது மூத்த மகனான பட்டத்து இளவரசர் நருஹிட்டோ (வயது 57) மன்னராக முடிசூட்டப்படுவார் என கூறப்படுகிறது.