Header Banner Advertisement

ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது உண்மை என சொல்லும் ஜெயலலிதாவின் அத்தை மகள்


Jayalalitha daughter aunty lalitha Amrutha

print

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மகள் எனக் கூறி வரும், பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற மஞ்சுளா, அதை நிரூபிக்க, மரபணுச் சோதனை நடத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான்’ என, அவரது அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளது பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தி உள்ளது

கர்நாடக மாநிலம், பெங்களூரில்வசித்து வரும் ஜெயலலிதா உறவினரான லலிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

என் அம்மா ஜெய்சிகாவின் அண்ணன் ஜெயராமின் மகள் தான் ஜெயலலிதா. நடிகர் சோபன் பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும், பெண் குழந்தை பிறந்தது உண்மை. ஜெயலலிதாவின் தாய் இறந்து விட்டதால், என் பெரியம்மா ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். தனக்கு குழந்தை பிறந்தது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என, ஜெயலலிதா, என்னிடம் சத்தியம் வாங்கினார். இந்த குழந்தை, அம்ருதா தான் என என்னால் உறுதியாக கூற இயலாது என்றாலும் மரபணுச் சோதனையில் தான் உறுதிப்படுத்த முடியும் என்று ஜெயலலிதா உறவினரான லலிதா பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தி உள்ளது