தக்காளிக் காய் கூட்டு செய்முறை


001

print

தேவையான பொருள்கள்:

தக்காளிக்காய் – 1/4 கிலோ
கத்தரிக்காய் – 1/4 கிலோ
நிலக்கடலை – ஒரு கைப்பிடி
வேகவைத்த துவரம் பருப்பு – 1/4 கப்
பால் (அல்லது தேங்காய்ப் பால்) – அரை கப்
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லித் தழை

வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4, 5
தனியா – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.

நிலக்கடலையை ஒரு மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும் அல்லது துவரம் பருப்போடு குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.

தக்காளிக் காய், கத்தரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா என்ற வரிசையில் சேர்த்து, சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

நறுக்கிய தக்காளிக் காய், ஊறவைத்த நிலக்கடலையைச் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

கத்தரிக்காய், தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடி, வேகவைக்கவும்.

கத்தரிக்காய் முக்கால் பதம் வெந்ததும், அரைத்த விழுது சேர்த்து, அரை கப் பால் அல்லது தேங்காய்ப் பால், தேவைப்பட்டால் இன்னும் நீர் சேர்த்து மேலும் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு சிம்மில் வைத்துக் கொதிக்கவிடவும்.

வேகவைத்து மசித்த துவரம் பருப்பு கலந்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

இதே முறையில் நாட்டுக் காய்கறிகளான பாகற்காய், புடலங்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், போன்ற காய்களிலும், பீன்ஸ், சௌசௌ, கோஸ் போன்ற காய்களிலும் விரும்பினால் பொருத்தமான பயறுகள் சேர்த்துச் செய்யலாம்.

நிலக்கடலை தவிர வேறு பயறுகளாக இருந்தால் எட்டுமணி நேரம் ஊறவைத்து குக்கரில் பருப்போடு வேகவைத்துச் சேர்க்க வேண்டும். இந்த முறையில், அரைத்துவிடும் பொருள்களில் 7, 8 பச்சை நிலக்கடலையும் சேர்த்து அரைக்கலாம். சுவையாக இருக்கும்.

ஊறவைத்த பயறு தயாராக இல்லாதபொழுது ஒரு கைப்பிடி கடலைப் பருப்பையே நேரடியாக காயோடு வேகவைத்துக் கொள்ளலாம்.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.