தமிழகத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு


www-villangaseithi-com

print

தமிழகத்தில் , முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.

தமிழர்கள் கர்நாடகவில் தாக்கப்படுவதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்களும், வணிகர் சங்கங்களும் ஒருங்கிணைந்து அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது, சொத்துக்கள் தீ வைத்த எரிக்கப்பட்டது, கடைகள், ஓட்டல்கள் சூறையாடப்பட்டது போன்ற சம்பவத்தால் அந்த மாநிலமே வன்முறை களமாக காட்சியளித்தது. இதனால் அந்த மாநிலத்தில் பணியாற்றிய பலரும் தமிழகத்திற்கு திரும்பிவிட்டனர். கர்நாடகாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை (16-ந்தேதி) வணிகர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் சுமார் 4600 பெட்ரோல் நிலையங்கள் நாளை மூடப்படும். லாரி உரிமையாளர் சங்கம், பால் முகவர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் , முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் நாளை மூடப்படும் என தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.