Header Banner Advertisement

தமிழகத்தில் லாரிகள் இன்று இரவு முதல் ஒடாது என லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு


001

print

சுங்க கட்டண வசூலை கண்டித்து இன்று இரவு முதல் தமிழகத்தில் 2¼ லட்சம் லாரிகள் ஒடாது என லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது

பாஜகவின் மோடி அரசாங்கம் நிர்வாக திறன் இன்றி முட்டாள் தனமாக சரியான திட்டமிடலின்றி முடிவெடுத்து ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்து நடுத்தர மக்களை அல்லோலப்பட விடுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி கொந்தளிப்புடன் கூறி புலம்பி வருகின்றனர்

கடந்த 10-ந்தேதியில் இருந்து வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகிறார்கள். இதற்காக அதிகாலையில் இருந்தே காத்துக்கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் கடந்த ஒருவாரமாக சில்லரை தட்டுப்பாடுகளால் கடும் அவதியை சந்தித்து பரிதவிக்கின்றனர்.

பிரதமரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து உள்ளன. உரிய முன்னேற்பாடுகளை செய்யாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

பாஜகவின் மோடி அரசாங்கம் நிர்வாக திறன் இன்றி முட்டாள் தனமாக சரியான திட்டமிடலின்றி முடிவெடுத்து ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று வெளியிட்ட அறிவிப்பின் காரணமாக ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

இதையடுத்து 24-ந் தேதி வரை சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.அரசு அளித்த அந்த சலுகை இன்று இரவு 12 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போதுமான புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வராததாலும், சில்லரை தட்டுப்பாடு கடுமையாக நிலவுவதாலும் சுங்க கட்டண வசூலை வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

அப்படி கட்டணத்தை நிறுத்தாவிட்டால் இன்று இரவு முதல் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

இது குறித்து தென் மாநில லாரி உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்த
நோட்டு பிரச்சினையால் தற்போது 50 சதவீத லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சுங்க கட்டண வசூலை டிசம்பர் 31-ந் தேதி வரை தள்ளி வைக்காவிட்டால் இன்று இரவு முதல் தென்னிந்தியாவில் லாரிகள் ஓட வாய்பில்லை.நாடு முழுவதும் உள்ள 351 சுங்கச்சாவடிகள் மூலம் தினமும் 40 கோடி வசூலாகிறது. வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் சுங்கச்சாவடிக்களில் 7 முதல் 8 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது.

சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு மாற்று ஏற்பாடாக டீசல் மீது அரசு ரூ.1.50 வரி விதிக்கலாம். இப்படி டீசல் மீது போடும் வரி மூலம் அரசுக்கு மாதம் ரூ.70 கோடி வருவாய் கிடைக்கும் என்பதால் சுங்கச்சாவடிகளை நிரந்தராமாக அகற்றலாம் என்று சண்முகப்பா தெரிவித்துள்ளார்

இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

இன்று முதல் பெட்ரோல் பங்க்களில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதும் முடிவுக்கு வருகிறது. இதனால் டீசல் நிரப்பவும், இரவு முதல் சுங்கச்சாவடிகளுக்கு கொடுக்கவும் புதிய ரூபாய் நோட்டுகள் கையில் இல்லை.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதன் மூலம் தினமும் லாரி உரிமையாளர்களுக்கு 150 கோடி வருவாய் இழப்பும், தினமும் ரூ1500 கோடிக்கும் அதிகமாக பொருட்கள் தேக்கம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்