Header Banner Advertisement

தமிழிசையை முதலமைச்சராக்க பாஜக ஒத்திகை பார்ப்பதாக திவாகரன் குற்றச்சாட்டு !


Divakaran Tamilisai

print

 

தமிழிசையை முதலமைச்சராக்க பாஜக ஒத்திகை பார்ப்பதாக திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார்
நாகை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் நடைபெறும் துலா உற்சவ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறைக்கு வருகை தந்த திவாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
 
கோவையில் ஆளுநர் தமிழிசையை அழைத்து கொண்டு ஆய்வு கூட்டம் நடத்தியதை அமைச்சர்கள் வரவேற்பது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழிசையை தேர்தலில் நிறுத்தி முதலமைச்சராக்கும் ஒத்திகை நிகழ்ச்சி போல் தெரிகிறது. அண்ணன் எடப்பாடியும், ஓபிஎஸ்சும் விட்டுக்கொடுப்பார்கள்போல் தெரிகிறது.
 
மயிலாடுதுறையில் நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி உலகப்பிரசித்திப் பெற்றது. காவிரியில் தண்ணீர் விடாமல் துலா உற்சவத்தை இருட்டடிப்பு செய்துள்ளனர். காவிரி ஆறு இன்று கேவலமாக உள்ளது ,தமிழ்நாட்டின் உரிமைகளை கேட்டுப் பெறுவதற்கு இருவருக்கும் திராணியில்லை என்று திவாகரன் கூறினார்