தரங்கம்பாடி கடற்கரையில் கொண்டாட்டம்


3

print
‘பங்களா ஆன் த பீச்’

சரித்திரப் புகழ்பெற்ற தரங்கம்பாடி, ஹனிமூனுக்கும் பெயர் பெற்றது. கி.பி.1680 முதல் 1845 வரை டேனீஷ் கிழக்கிந்தியா கம்பெனியின் தலைமையிடமாக திகழ்ந்த இடம், வரலாற்று சிறப்பு மிக்கது. டேனீஷ் கோட்டை சுற்றுலாவிற்கு ஏற்ற இடம்.

அதன் அருகிலேயே இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் இரண்டு தேவாலயங்கள், ஒரு ரெஸ்ட்டாரண்ட், ஒரு கைவினைப் பொருட்கள் விற்கும் இடம் ஆகியவை உள்ளன.

இங்கு இருந்த டேனிஷ் அரசின் கலெக்டர் பங்களா தற்போது ‘பங்களா ஆன் த பீச்’ என்ற பெயரில் ஹோட்டல்களாக இயங்கி வருகிறது. பல்வேறு நாடுகளின் கட்டடக்கலை அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள இந்த ஹோட்டலில் தங்கி எதிரே மின்னும் கடல் அலைகளைப் பார்ப்பது தனி சுகம். அதிலும் மனதுக்குப் பிடித்த துணையோடு கை கோர்த்தபடி பார்ப்பது பரவசமான அனுபவம்.
மாலை நேரத்தில் இந்தக் கடற்கரையில் உள்ளூர் மக்கள் வந்து செல்வது மனதைக் கவரும் அம்சம். அதிலும் வண்ண வண்ண சேலைகளில் அந்தப் பெண்கள் குழந்தைகளுடன் வருவதும் பார்க்க ஆனந்தம் தரும். இவற்றையெல்லாம் பார்த்தப்படி சமையல் செய்யலாம். இல்லையென்றால் துணையோடு ரசிக்கலாம். ஹனிமூன் ஜோடிக்கு ஏற்ற இடம் இது.

எப்படி போவது?
சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவிலும் பாண்டிச்சேரியில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும் தரங்கம்பாடி உள்ளது.

எங்கு தங்குவது?
நீம்ரானா ஹோட்டல் குழுமம் இங்குள்ள ‘பங்களா ஆன் த பீச்’ ஹோட்டலை நடத்தி வருகிறது. இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.4,450.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.