திமுக எம்.பி திருச்சி சிவா கன்னத்தை பதம் பார்த்த அதிமுக பெண் எம்.பி


DETH

print

அதிமுக வை சேர்ந்த பெண் எம்.பி சசிகலா புஷ்பா  திமுக வை சேர்ந்த எம்.பி சிவா கன்னத்தில் புது தில்லி விமான நிலையத்தில் வைத்து இன்று அறை விட்டதாக ஒரு செய்தி இந்தியா முழுவதும் வைரலாக பரவி வருகிறது

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலின் போது சசிகலா புஷ்பா, திருச்சி சிவா ஆகிய இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. அதன் பின்னர் புகைப்பட சர்ச்சையில் சிக்கிய இருவரும் அதை மறுத்தை அனைவரும் அறிந்ததே .

இந்த நிலையில் இன்று மதியம் புது தில்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பாவும் , வந்துள்ளனர். அப்போது திருச்சி சிவா சசிகலா புஷ்பாவிடம் ஏதோ பேச சசிகலா திடீரென திருச்சி சிவாவை அறைந்ததாக கூறப்படுகிறது.

விமான பயணிகள் மத்தியில் திடீர் என சசிகலா புஷ்பா அறைவிட்டதை கண்ட இரு தரப்பிலும் வந்த கட்சிக்காரர்கள் , காவலர்கள் என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினராம் .அதன் பின்னர் பின்னர் சசிகலா புஷ்பா விறுவிறு வென சென்றுவிட்டாராம்.

திருச்சி சிவாவிடம் மிக நெருங்கி பழகும் சசிகலா புஷ்பா கடந்த சில மாதங்களாக அவரிடம்
இருந்து விலகியே இருப்பதாக பரவலாக சொல்லப் படுகிறது .

இந்த நிலையில் அதிமுக தலைமையையும் சசிகலா புஷ்பாவை பற்றியும் திருச்சி சிவா வேறொரு பிரமுகரிடம் ஏதோ கூற அந்த தகவல் சசிகலா புஷ்பாவின் கவனத்துக்கு வந்தாக கூறப்படுகிறது.

அதனால் திருச்சி சிவாமீது கடும் ஆத்திரம் கொண்ட சசிகலா புஷ்பா சிவாவை பார்த்தவுடன் இதுபற்றி இன்று கேட்டாராம் . திருச்சி அதற்கு சிவா ஏதோ கூற ஆத்திரமடைந்த சசிகலா திடீரென அவரது கன்னத்தில் பளார் என அறை விட்டதாக சொல்லப்படுகிறது

திடீரென திருச்சி சிவாவை ஏன் அறைந்தார், அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் என்ன என்ற தகவல்கள் வந்துள்ளது கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது சசிகலா புஷ்பா, திருச்சி சிவா ஆகிய இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானபோது வெளியே தலையை காட்ட வெட்கப்பட்டு கட்சிக்கூட்டங்களில் கூட கலந்து கொள்ளாமல்  சிறிது காலம் திருச்சி சிவா ஒதுங்கி இருந்தது குறிப்பிடதக்கது

கடந்த காலங்களில் திமுக எம்.பி திருச்சி சிவாவும், அதிமுக பெண் எம்.பி சசிகலா புஷ்பாவும் மிக நெருங்கி  பழகி வந்த நிலையில் அவர்கள் இருவரும் பிரிய என்ன காரணமோ ? என்பதே அனைவரிடமும் எழும் கேள்வியாக உள்ளது

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.