திருப்பதி கோயில் வசூலில் ரூ.1000 கோடி பங்கு பணம் கேட்டு உயர் நீதிமன்றத்தில் டிரஸ்டி வழக்கு


001

print

திருப்பதி கோயில் வசூலில் ரூ.1000 கோடி பங்கு பணம் கேட்டு சிலுகுரி பாலாஜி வெங்கடேஸ்வரா கோவில் பரம்பரை அர்ச்சகரும், டிரஸ்டியுமான எம்.வி. சவுந்தர் ராஜன் என்பவர் ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ளார்.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகள் ஐதராபாத் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் துறை ரீதியாக இரண்டு மாநிலத்துக்கும் வருவாய் பகிர்ந்து அளிக்கப்பட்ட ன்படி இந்து அறநிலையத்துறை சார்பில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் இரு மாநிலங்களுக்கும் நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநில பிரிவினை சட்டத்தின் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானம் தெலுங்கானாவுக்கு ரூ.1000 கோடி தர வேண்டும் என்று ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஐதராபாத்தில் உள்ள சிலுகுரி பாலாஜி வெங்கடேஸ்வரா கோவில் பரம்பரை அர்ச்சகரும், டிரஸ்டியுமான எம்.வி. சவுந்தர் ராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது :-

திருப்பதி கோவில் தேவஸ்தானம் சார்பில் தெலுங்கானா மாநிலத்துக்கு நிர்வாக நிதிக்கு ரூ. 382.87 கோடி, பொது நிதி திட்டத்துக்கு 188.61 கோடி ஆகிய தொகைகள் ஒதுக்கப்படாமல் உள்ளது. மாநில பிரிவினை சட்டத்தின் அடிப்படையில் 1987-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை கணக்கிட்டு திருப்பதி தேவஸ்தானம் ரூ.1000 கோடியை தெலுங்கானாவுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ள மனுவை உயர் நீதிமன்ற விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இது குறித்து 3 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய ஆந்திரா, தெலுங்கானா அரசுகளுக்கும், திருப்பதி தேவஸ்தானத்துக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திருப்பதி கோவில் அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

ரூ.1000 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள சவுந்தர்ராஜன் நியாயமானவராக இருந்தால் முதலில் அவர் நிர்வகிக்கும் சிலுகுரி பாலாஜி வெங்கடேஸ்வரா கோவிலை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். கடவுள் பணத்தில் பங்கு கேட்பது பாவச்செயல் என்று தெரிவித்துள்ளார்

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.