Header Banner Advertisement

திருமலைக்கு தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு


001

print

திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

திருப்பதி கோவில் வளாகத்திலுள்ள தங்கும் விடுதிகளில் தற்போது வாடகை அறை பெறுதல், தரிசன டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவற்றிக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதேபோல் நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கும் தேவஸ்தானம் ஆதார் அட்டையை இனி கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக கடந்த 17-ந்தேதி முதல் திருமலைக்கு நடைபாதை மூலம் நடந்து வந்த பக்தர்களிடம் பரீட்சார்த்தமாக இதை செயல்படுத்தியது. ஆனால் நடைபாதை மற்றும் தர்ம தரிசன பக்தர்கள் திருமலைக்கு வரும் போது ஆதார் அட்டையை கொண்டு வருவதில்லை. அதனால் கடந்த 5 நாட்களில் 10 சதவீதம் பக்தர்கள் மட்டுமே ஆதார் அட்டையைக் காண்பித்தனர்.

இந்த நிலையில் திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் தங்களிடம் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தேவஸ்தானம் நடைபாதை பக்தர்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்க உள்ளது.

மேலும் நடைபாதை பக்தர்களுக்கு அளிக்கும் டோக்கன் வாயிலாக லட்டு முறைகேடு அதிக அளவில் நடைபெற்று வருவதாக தேவஸ்தானம் கண்டறிந்துள்ளது.

லட்டு முறைகேட்டை தடுக்க விரைவில் இம்முறையை அமல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆதார் அட்டை இல்லாதவர்கள் தங்களிடம் உள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டையை கட்டாயம் திருப்பதிக்கு வரும்போது கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.