Header Banner Advertisement

பக்தர்கள் மலையேற உயர் நீதிமன்றம் அனுமதி


Thiruvannamalai temple

print

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வருகிற டிசம்பர் 2 ல் கார்த்திகை தீபம் ஏற்றும்போது பக்தர்கள் மலைமேல் ஏற மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ள நிலையில் பக்தர்கள் மலையேற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மலைமேல் ஏற மாவட்ட நிர்வாகம் கடந்த அக்டோபர் 7 ம் தேதி தடை விதித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள்
வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள மகா தீபத்திருவிழா அன்று காலை 6 மணி முதல் 2,500 பக்தர்களை மட்டும் மலைக்கு செல்ல அனுமதிக்கலாம். அதற்கு முறையாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். கற்பூரம், தீப்பெட்டி ஆகியவை மலைக்கு கொண்டு செல்லக்கூடாது. தண்ணீர் பாட்டில், நெய் கொண்டு செல்லலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைப்பதாக கூறினார்