தி.மு.க எம்.பி திருச்சி சிவா என்னை சீண்டியதால் அறைந்தேன் :  சசிகலா புஷ்பா


DETH

print

 

அதிமுக வை சேர்ந்த பெண் எம்.பி சசிகலா புஷ்பா திமுக வை சேர்ந்த எம்.பி சிவா கன்னத்தில் புது தில்லி விமான நிலையத்தில் வைத்து இன்று அறை விட்டதாக ஒரு செய்தி இந்தியா முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் நடைபெற்ற சம்பவம் குறித்து தி.மு.க எம்.பி. திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் தனியார் செய்திதொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் அளித்த விளக்கமாவது :

அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா கூறியதாவது:

அ.தி.மு.க., ஆட்சி பற்றியும் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் தவறாக விமர்சித்து என்னை சீண்டினார் சிவா. ஜெயலலிதா குறித்து யார் விமர்ச்சித்தாலும் எனக்கு கோபம் வரும்.அதனால் அவர் கன்னத்தில் 4 முறை அறைந்தேன். அதில் அவர் கழுத்து செயின் அறுந்தது. என்று அவர் கூறியுள்ளார்

தி.மு.க எம்.பி திருச்சி சிவா கூறியதாவது:

அ.தி.மு.க எம்.பி சசி்கலா புஷ்பா என்னை காரணம் இன்றி தாக்கினார். என் சட்டையை பிடித்து இழுத்தார். இதனால் எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது என்று அவர் கூறியுள்ளார் .

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.