Header Banner Advertisement

பாஜக.,வினர் தீபாவளியை ராமர் கோவிலில் கொண்டாடப் போவதாக சுப்ரமணியன் சுவாமி தகவல்


Subramanian Swamy

print

 

அயோத்தி ராமர் கோவிலில் அடுத்த தீபாவளியைபாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நீண்டகாலமாக ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிது.

இந்த சுழலில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்து இருந்தார் .

இந்த நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்ரமணியன் சுவாமி கலந்து கொண்டு பேசியதாவது :-

வருகிற ஆண்டு தீபாவளி பண்டிகையை நிச்சயம் ராமர் கோவிலில் கொண்டாட வாய்ப்புள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. கோவில் கட்டுவதற்கான மூலப்பொருள்கள் தயாராக உள்ளன. சுவாமி நாராயண் கோவிலை போலவே அனைத்து உள் கட்டமைப்புகளை பொருத்தினால் கோவில் தயாராகி விடும்.

ராமர் கோவில் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. தினமும் விசாரணை நடைபெறும் என்பதால் விரைவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்துவிடும். ராமர் கோவில் தொடர்பான வ்ழக்கில் நாம் தான் நிச்சயம் வெற்றி பெறப்போகிறோம் என சுப்ரமணியன் சுவாமி பேசினார்