Header Banner Advertisement

ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா எனும் தீவிரவாத அமைப்பினர் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்


terrorist abbas syed

print

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்க தலைவனான ஹபீஸ் சயீத் தற்போது நடத்திவரும் ஜமாத் உத் தவா எனும் தீவிரவாத அமைப்பினர் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்க தலைவனான ஹபீஸ் சயீத் தற்போது நடத்திவரும் ஜமாத் உத் தவா என்ற அமைப்பை நடத்தி வருகிறான். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு சதிச்செயலில் ஈடுபட்ட இவனை, தேடப்படும் குற்றவாளி பட்டியலில் சேர்த்து, இவனது தலைக்கு ரூ.6 கோடியே 50 லட்சம் பரிசுத்தொகையை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஹபீஸ் சயீத் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.