Header Banner Advertisement

நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி பிரதீபா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்


Nakheeran Kovi Lenin Pratibha Hide Death

print

நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி மறைவுக்கு திமுக.,வின் செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று ஸ்டாலின்வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

நக்கீரன் பொறுப்பாசிரியரும், நண்பருமான திரு.கோவி.லெனின் அவர்களின் துணைவியார் திருமதி பிரதீபா அவர்கள் மறைந்த துயரச்செய்திக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். திராவிட இயக்கக் கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டவராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் விளங்கிய பிரதீபா, இணையத்தில் திராவிட இயக்கக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்பவர்களில் முதன்மையானவராக விளங்கியவர்.

அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, துணைவியாரை இழந்து வாடும் திரு.கோவி.லெனின் அவர்களுக்கும், குழந்தைக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .