Header Banner Advertisement

சில பிரச்சனைகள் தீவிரமாக வலுபெறுவதற்கு காரணம் ?


www.villangaseithi.com

print

எந்தவிதமான பிரச்சனையாக இருந்தாலுமே..விசாரணை… நியாயம் பேசுதல் என்று ஆரம்பித்தால்…அது போய் கொண்டேதான் இருக்கும்….

சம்மந்தபட்டவர்களும்.. உறவுகளும் விலகும்வரை போய்கொண்டே இருக்கும்.. எல்லோருமே நம்மை வெறுக்கும்வரை போய்கொண்டே இருக்கும்…

நம் நிம்மதி.. அமைதி சந்தோஷம் நம்மைவிட்டு காத தூரம் ஓடும் வரையும் போய்கொண்டே இருக்கும்…பின்பாவது முற்றுபெறுமா என்றால் ஆகாது… நாம் இருக்கும்வரையும் எதாவது ஒரு வகையில் தொடர்ந்து போய்கொண்டே இருக்கும்..

நாமாக பார்த்து… வெறுத்து…களைத்துபோய் ஒரு கட்டத்தில் முற்றுபுள்ளி வைப்பதுதான்… நடந்துகொண்டிருக்கிறது….

சில பிரச்சனைகள் தீவிரமாக வலுபெறுவதற்கு முன்பே முற்றுபுள்ளி வைக்கதான் தவறிவிடுகின்றோம்..அதனால் ஏற்படும் பின்விளைவுகளால் பின்னர் அவதியுற்று மனஉளைச்சல் அடைந்து சோர்ந்து போகின்றோம்… அதிகம் இழந்தும் போகின்றோம்…

விசாரணைகூட இருக்கலாம் அளவாக…ஆனால் அதன் முடிவு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ கூட போய் விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது அவசரபட்டு யார் மனைதையும் நோகடிக்காமல்… வருத்தங்களை உண்டு பன்னாமல் நாகரிகமாக …பட்டும்படாமல்… யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்கலாமே…

முடிவு எப்படி வேண்டுமானாலும் ஆகலாம் அதற்குள் அவசரபட்டு..நாமாக கற்பனை செய்து…சந்தேகங்களில் அடிப்படையில் நாமே முடிவெடுத்து…அதில் உறுதியாகவும் இருந்து.. எதிராளியின் மனதை எவ்வளவு நோகடிக்க முடியுமோ அவ்வளவும் செய்து..கடைசியில் உண்மை தெரியும்போது…அங்கே சூழ்நிலை என்னவாகும்..யோசிக்கதான் தவறுகிறோம்….

நாம் தெரிந்துகொள்ள….அறிந்துகொள்ள விரும்பும் விஷயங்களை தெரிந்துகொள்ளும்போது…சிலரோ,..சிலதோ நம்மைவிட்டு விலகாமல் வருத்தங்கள் இல்லாமல் இருந்தால் போதும்..நாம் முறையாகதான் நடந்துகொண்டுள்ளோம் என் ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளலாம்…