Header Banner Advertisement

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது


001

print

ஆந்திராவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டி ஆட்டத்தில் அமித் மிஸ்ரா ‘சுழலில்’ அசத்த இந்திய அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிற முதல் நான்கு போட்டி முடிவில் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. பைனல் போன்ற ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நேற்று ஆந்திராவின் விசாகப்பட்டனத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ரா மீண்டும் வாய்ப்பு பெற்றார். அறிமுக வீரராக ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து தரப்பில் தேவ்சிச்சிற்குப் பதில் ஆண்டர்சன் இடம் பெற்றார். ரகானே 20 ரன்னுக்கு அவுட்டானார். ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். இவர், 65 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். கோஹ்லி அரைசதம் (65) விளாசினார். தோனி 41 ரன்னுக்கு அவுட்டானார். மணிஷ் பாண்டே ‘டக்’ அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (0) ஏமாற்றினார். லதாம் (19), கேப்டன் வில்லியம்சன் (27), ராஸ் டெய்லர் (19) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அமித் மிஸ்ரா பந்தில் நீஷம் (3), வாட்லிங் (0), சவுத்தீ (0), சோதி (0) அவுட்டாகினர். நியூசிலாந்து அணி 23.1 ஓவரில் 79 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் அமித் மிஸ்ரா 5 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என இந்திய அணி கைப்பற்றி கோப்பையை வென்றுள்ளது