Header Banner Advertisement

நோயாளியின் வயிற்றில் இருந்து 72 நாணயங்கள் அகற்றம்


doctor stomach Operation

print

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள தோரட்படா என்னும் கிராமத்தைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட கிருஷ்ண சோமல்யா சம்பார் என்பவரின் வயிற்றில் இருந்த 72 நாணயங்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

இது குறித்து மருத்துவர் அமித் கீலே செய்தியாளர்களிடம் கூறியதாவது

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சோமல்யாவுக்கு நாணயங்களை விழுங்கும் பழக்கம் இருந்துள்ளது. பல நேரங்களில் அவை இயற்கை உபாதையுடன் தானாக வெளியேறி இருக்கிறது. ஆனால் பல நாணயங்கள் வெளியேறாமல் அப்படியே தங்கியுள்ளது. இதனால்தான் அவருக்கு தொடர் வாந்தி, அஜீரணக் கோளாறு ஏற்பட்டு உள்ளது. தற்போது அவர் உடல்நலம் தேறிவருகிறார்”
என்று மருத்துவர் அமித் கீலே கூறினார்