Header Banner Advertisement

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகைதாரர்கள் உள்பட அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம் என தகவல்


001

print

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகைதாரர்கள் உள்பட அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த
ஆட்சியர் அண்ணாதுரை பேசியதாவது :-

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மூலம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் அனைத்து முக்கியமான உணவு பயிர்கள், எண்ணெய் வித்துகள், ஆண்டு தோட்டக்கலை வணிகப் பயிர்களைக் காப்பீடு செய்யலாம். குத்தகைதாரர்கள் உள்பட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பங்கு பெறலாம். இத்திட்டத்தில் பங்கு பெறும் விவசாயிகள் கண்டிப்பாக வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் உணவு பயிர் மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு காரிப் பருவத்துக்கு 2 சதமும், ராபி பருவத்துக்கு 1.5 சதமும், காரிப், ராபி ஆகிய இரு பருவங்களில் காப்பீடு செய்யும் ஆண்டு வணிக மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு அதிகபட்சம் 5 சதமும் பிரீமியம் செலுத்தினால் போதுமானது.

பாதகமான பருவ மாற்றங்களால் பயிர் விதைக்க இயலாத காலங்கள், வெள்ளம் மற்றும் வறட்சியால் ஏற்படும் இடைக்காலப் பாதகமான நிலை, அறுவடைக்கு பின் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளை இக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஈடு செய்யலாம். விவசாயிகள் மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலர்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், நியூ இந்தியா காப்பீட்டு நிறுவன அலுவலகம் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்று அண்ணாதுரை தெரிவித்துள்ளார்

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.