பள்ளிக்கு இனி ‘கட்’ அடித்தால் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்ப திட்டம்


www-villangaseithi-com

print

நாடு முழுவதும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் திட்மிடப்பட்டு வருகிறது.

எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பவது குறித்து பள்ளி உயரதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது :-

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் சிலர், ஏதாவதொரு காரணத்துக்காக, பள்ளிக்கு வராமல், ‘கட்’ அடிப்பதாக புகார்கள் வருகின்றன. பல சந்தர்ப்பங்களில், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் பற்றி, பெற்றோருக்கு எதுவும் தெரியாமல் போவதனால் ஆசிரியர்களுடன் நேரடியாக பேசும்போது மட்டுமே, குழந்தைகள் பற்றி, பெற்றோருக்கு தெரிகிறது.

அதற்கு தீர்வு எட்டும் வகையில் மாணவர்களின் வருகைப்பதிவு, வீட்டுப்பாடம், வகுப்பு தேர்வு முடிவுகள், உடல் நலன் தொடர்பான தகவல்கள், தேர்வு அட்டவணை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, இணையம் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம், பெற்றோருக்கு தெரிவிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ‘ஷால தர்பண்’ என்ற பெயரில் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் நுழைவதற்கான, ‘லாக்இன்’ குறியீடும், ‘பாஸ்வேர்ட்’டும், மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

எஸ்.எம்.எஸ்., அனுப்பும் பணிகள், அடுத்த மாதம் முதல் துவங்கும். காலையில் பள்ளிக்கு வராத மாணவர் பற்றிய தகவல், பெற்றோருக்கு அன்றைய தினமே, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும். கேந்திரிய வித்யாலயாவின் புதிய இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி என்பதை, மின்னணுவியல் முறையில் விளக்கும், ‘இ – டுடோரியல்ஸ்’ வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.