Header Banner Advertisement

பாகிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சயீத் அஜ்மல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு


Pakistan Saeed Ajmal Cricket

print

 

ஐசிசி கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பாக குற்றம் சாட்டுகளை கூறியுள்ள பாகிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சயீத் அஜ்மல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

பாகிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த சயீத் அஜ்மல் 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 113 ஒருநாள் போட்டியில் 184 விக்கெட் கைப்பற்றி சர்வதேச ரேங்கிங் பட்டியலில் நம்பர்-1 பந்துவீச்சாளராகவும் திகழ்ந்தார். ஆனால், இவரது பந்துவீச்சு முறை அவ்வப்போது சர்ச்சைக்குள்ளானது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதிமுறை மீறி இவரது பந்துவீச்சு முறை அமைந்திருப்பாக 2009ல் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் பந்துவீச்சு முறையை மாற்றிக் கொண்டாலும், 2014ல் மீண்டும் புகார் எழுந்தது. அதனால் சயீத் அஜ்மல் பந்துவீச ஐசிசி தடைவிதித்தது. இந்த தடை 2015ல் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், சயீத் அஜ்மலால் பார்முக்கு திரும்ப முடியவில்லை. அவர் கடைசியாக 2014ல் டெஸ்ட் போட்டியிலும், 2015ல் ஒருநாள் போட்டியிலும் விளையாடி உள்ளனர். அதன் பிறகு அணிக்கு திரும்ப முடியாத சயீத் அஜ்மல், அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.